புதன், 8 டிசம்பர், 2010

அர்த்தம்

அவளது அகராதியில்
எவனொருவன் உயிரைக்கொடுத்து விரும்பி
விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றக்காத்திருந்து
அவள் கூறிய எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லி
கடைசியில் உன்னைப்பிடிக்கவில்லை
என்று அவள் கூறும்போது,
சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் முட்டாள் எவனோ...
அவனே ஜென்டில்மேன்

இதை எழுதும் நானும் ஓர் ஜென்டில்மேன்

திங்கள், 8 நவம்பர், 2010

பைத்தியக்காரர்கள் நாங்கள்


புத்திசாலிகள் நீங்கள்
-------------

குறைந்தன மின்னஞ்சல்கள்
குறைந்தன பேச்சு வார்த்தைகள்
குமுறுகின்றேன் நான் - நிம்மதியாக
குறட்டைவிடப்போகிறேன்
குட்பை என்கிறாய் நீ

இப்போதெல்லாம் என் காதுகளில்
தேன் வந்து பாய்வதில்லை - காரணம்
அழகிய தமிழில் ஐ லவ் யூ என்று நான் சொல்வது உன்
அறை எங்கும் ஒலித்து
அது எனக்கே திரும்பவும் கேட்கிறது.
பதிலுக்கு - நீ
ஆங்கிலத்தில் தேங்ஸ் என்கிறாய் !!!!

இப்போதெல்லாம் கன்னத்தில்
செல் பேசியை வைப்பதில்லை
காரணம் - நீ கொடுக்கும்
முத்தங்கள் குறைந்து விட்டன.

இவ்வளவு நாள் உன் அன்பான
வார்த்தைகளைக் கேட்டு
குளிர்ந்திருந்த செல்பேசி
இப்போது அவ்வாறின்றி சீக்கிரமே சூடாகி
என் அவமானத்தை
குத்திக்காட்டுகிறது

யார் யாரையோ காரணம் காட்டி, நம்மிடையே இருக்கும்
யதார்த்தமான காதலுக்கு தடை போடுகின்றாய்.
இத்தனை வருடங்களாக அடக்கிவைத்திருக்கும் கனவுகளை
நான் உன்னைத்தவிர யாரிடம் தான் சொல்வது.

திருமணத்திற்கு பின்பு பேசுவதற்கு ஒன்றுமே இல்லை
என்பதற்காக விருப்பங்களை அடக்கி வைக்க
திருமணம் ஒன்றும் அணைக்கட்டு இல்லை.
அங்ஙனம் கட்டுவதற்கு நாம் ஒன்றும்
கர்நாடகத்திலோ கேரளாவிலோ பிறக்கவில்லை.

எப்படியிருந்தாலும் சில சமயம் பேசியவற்றை திரும்பவும்
பேசுவது மிகவும் சுகம். அது நீயாக மட்டும் இருக்கும் பட்சத்தில்
யோவ்...!!! முதலாளி நான் உன்னைச் சொல்லவில்லை.

புவிஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தால் தான்
எந்த ஒரு உயிரினமும் வாழ முடியும்
அங்ஙனம் அன்பு எப்போதும் இருக்கும் பட்சத்தில் தான்
காதலும் வாழ்ந்து கொண்டிருக்கமுடியும்
அவ்வளவு ஏன்
பட்டம் உயரே பறக்க நூல்
விட்டுக்கொண்டுத்தான் இருக்கவேண்டும்.

என் புலம்பல்கள் கூட உனக்கு
வேடிக்கையாகவும்
ஏன் இந்த கவிதை (?) கூட
மொக்கையாகவும் தான் இருக்கும்.

எது எப்படி ஆயினும் நீ
அவ்வாறு கூறியது பிடிக்கவில்லை
என்னுள் சந்தேகச் சாத்தான் பிறந்து விட்டான்
நம்மிடையே காதல் இருக்கிறதா
இல்லை உனக்கேதும் தனிப்பட்ட விருப்பம்
இருக்குமோ என்று.. !!!

இப்போதுதான் புரிகிறது ஏதோ ஒரு
புண்ணியவான் சொன்னது..
ஆண்கள் படும் அவஸ்தைகள் எவற்றையும்
பெண்கள் மதிப்பதே இல்லை என்று.

ஹி ஹி ஹி - நீங்கள்
எங்களை
எப்படிக் கண்டித்தாலும்,
எங்ஙனம் ஏறி மிதித்தாலும்,
எச்சில் காறி உமிழ்ந்தாலும்
ஏளனம் செய்து சிரித்தாலும்

பொய்க்கோபம் கொண்டு
உங்களுடைய விருப்பங்களை மட்டும்
நாசூக்காக நிறைவேற்றிக்கொண்டாலும்

எதுவும் நடக்காதது மாதிரியே
அவ்வனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு
அடுத்தது என்ன செய்யலாம் ‘செல்லம்’ என்றுதான் கேட்கிறோம்.
யாரும் கற்றுக்கொடுக்கத்தேவையில்லை
எங்களுக்கு பழகிவிட்டது.

காரணம் ஒன்றுதான்...
இறைவன் பெண்களுக்குப் போட்டியாக
வேறு எதையும் படைக்கவில்லை..

நீங்கள் இறைவனின் படைப்பிலேயே
மிகச்சிறந்தவர்கள்- ஏன்
இவ்வுலகில் உள்ள அனைவரையும்
படைத்தவர்களும் நீங்கள் தான்

ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும்
நாங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
புத்திசாலிகள் நீங்கள்
பைத்தியக்காரர்கள் நாங்கள்...!!!

செவ்வாய், 2 நவம்பர், 2010

இதோ என் தேவதை


இதோ உன் தேவதை என்று
இத்தனை நாளாய் சொல்லாமலிருந்த
கடவுளை கண்டிப்பாக
கடிந்து கொள்ளவேண்டும் நான்.

கண்ணுக்கெதிரே இருந்தும் - இத்தனை நாள்
உன்னை
காணாமல் போகச்செய்ததில் எனக்கு
அவன் மேல்
அளவுகடந்த கோபம்.

அமைதியான முகம், அழகான நெற்றி
வசீகரம் தோய்ந்த கண்கள்
எடுப்பான நாசி
தேவைக்கும் சற்றே அதிகமான இதழ்கள்.
அமர்க்களப்படுத்தாத கூந்தல்
வாழ்வின் அனைத்து சுமைகளையும்
இறக்கி வைத்தாற்போல் புன்னகை
இவையனைத்தும் எனக்குப் பிடித்தது..

இவ்வளவு நாளாய் நீ எங்கிருந்தாய்.

நான் எதிர் பார்க்கவில்லை..
அளவிற்கு அதிகமாகவே பேசினோம்.
என் கடந்த வாழ்க்கை முறைகளை
என் வருங்கால மனைவி
எப்படி எடுத்துக்கொள்வாள்
என்ற எண்ணம் இருந்த காரணத்தினாலோ
என்னவோ
எனக்கு என் தேவதை
இப்படித்தான் இருக்கவேண்டும்
என்ற கனவே இல்லாமல் போய்விட்டது.

நீ இவ்வளவு வெளிப்படையானவளா
எனக்குத்தான் பேசுவதற்கு
வெட்கமாக இருக்கிறது.

உன் வாழ்வில் சமீபத்தில் ஏற்பட்ட ரணங்கள்
அவற்றை கூறும்போது
உன்னுடன் சேர்ந்து நானும் அனுபவித்தேன்
அந்த வலியை.

என் துரதிர்ஷ்டம்,
ஓர் உன்னதமான நபரை சந்திக்காமல்
விட்ட விதியை எண்ணி நான் வருந்துகிறேன்.

விதி உன் தந்தையை சந்தித்தற்கு முன்னர்
உன்னைப் பார்த்திருக்கக்கூடாதா
இந்த பேரிளம் பெண்ணையா அழவிடப்போகிறோமென்று
இரக்கப்பட்டு சென்றிருக்கும்.

எதுவும் நம்மைக் கேட்காமலேயே நடந்தன.
எனக்கு அப்போதே சந்தேகம்
உனக்குப் பிடித்திருக்கிறதா என்று..

நீ என்னை விரும்புகிறாய் என்று முதல் சந்திப்பிலேயே
தெரிந்த மாத்திரத்திலும்,
நீ என்னை கைவிடப்போவதில்லை என்று அறிந்தும் கூட
உனக்கு என்(னை)னப் பிடிக்கிறதோ அதைச் செய்ய
அனுமதியளித்தேன் - ஏனெனில்
புரிதல் என்ற ஒன்று இல்லாவிடில் - வாழ்க்கை
புளித்துத்தான் போகும்.

என்னைவிட உனக்குத்தான்
என் மேல் காதல் அதிகம் என்பதை தெரிந்துகொள்ள
எனக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது.
இது அதிகம் தான்...

ஆயினும் அந்த நேரத்தில் நான் சந்தித்த வலிமிகுந்த
அவஸ்தைகள் - உன் அழகான வார்த்தைகளால்
ஆறுதல் படுத்தப்பட்டன.
நம்மில் யார் மேல் யாருக்கு அதிக விருப்பம் உள்ளது
என்று நாளை சண்டை கூட வரக்கூடும்.
வெற்றிபெறுவது நானாக இருந்தாலும்
விட்டுக்கொடுப்பேன் - உனக்காக.

ஏண்டா இப்படிச் செய்றே ச்சீ போடா.. என்று
ஒருமையில் நீ சொல்லும்போதெல்லாம் - நான்
உன்னருகில் இருப்பதைப்போல உணர்கிறேன்.
சில சமயங்களில் நான் சற்று பேசிக்கொண்டே செல்கையில்
பாவனு பாவனு... என்று அழுத்தமாகச்சொல்வது
எனக்கு மிகவும் பிடிக்கிறது.
அவ்வார்த்தைகளை அடிக்கடி
அனுபவிக்கவாவது நான் இனிமேல்
அப்படி பேசியே ஆகவேண்டும்.

கிளியோபாட்ரா அவ்வளவாக
அழகில்லையே என்றவர்களிடம்
ஆன்டனி சொன்னானாம் - நீங்கள் என்
கண்கள் வழியே பாருங்கள்
அவளைவிடப் பேரழகி யாரும் இருக்கமுடியாதென்று.
உண்மைதான்.
உணர்கிறேன்..
நான் ஆன்டனியின் மறுபிறவியென்று

சேலையில் நீ அழகு தான் - இருப்பினும்
வெளிநாட்டு உடைகளில் நீ
ஆன்ட்ரோமீடா என்று கூறுவேன்.

உன்னை ஐ லவ் யூ என்று சொல்லவேண்டும் என்று நான்
கட்டாயப்படுத்தியது தவறுதான்.
உணர்ந்துகொண்டேன்.
அது அன்பாக பெறப்படவேண்டியது...அடிக்கடியல்ல.

நான் கேட்கவேண்டாமென்றுதான் நினைக்கிறேன். ஆனால்
கேட்டுத்தொலையேண்டா சனியனே
என்று சபிக்கின்றன என் செவிகள்.

நான் ஒரு பைத்தியக்காரன்.
உன்னை திரும்பிப்
பார்க்கக்கூட வெட்கப்பட்டுக்கொண்டு
வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இப்போதாவது புரிந்து கொள்
உன் முகம் பார்த்து பேச எத்தனிக்கையில் ஏதேதோ
உளறிக்கொட்டுகிறேன் என்று.

ஏதோ ஒரு பொய் சொல்லி உன் வீட்டிற்கு வந்தேன்.
நிறைய பேச வேண்டும் என்று தோனிற்று.. ஆனால்
என்ன பேசுவதென்று தெரியவில்லை.

உன் செல்லச் சிணுங்கல்கள், எதையோ மிகவும் எதிர்பார்த்து
அதை தவிர்க்க நினைத்த உன் போலி கண்டிப்புகள்
இவையனைத்தும் என்னை உன் அருகே அமரச்செய்தன.

பூ விழுந்தால் கூட சிவந்து போகும் உன் உள்ளங்கை
அதில் ரவிவர்மனை வைத்து தீட்டியதுபோல
கச்சிதமான ரேகைகள் - அனைத்தும்
என்னை வசீகரித்தன.

நீ இவ்வளவு அழகானவளா..

நீ மிகவும் சாதாரணமாக முகப்பூச்சு இல்லாமல்
தேவதையாய் ஜொலித்தாய்..
உன் அகன்ற நெற்றியில் அழகாய் பொருந்தியிருந்தது
அந்த மிகச் சரியான (சிரிய) பொட்டு.
உன் கன்னங்கள் முன்பைவிட சிவப்பாக தெரிந்தது.

விடைபெற எத்தனித்தபோது - என் கைகளை
நீ இறுகப்பிடித்துக்கொண்டு
வழியனுப்பியதை நினைத்தால்
இப்போதும் என் விழியோரம்
கண்ணீர்த்துளி எட்டிப்பார்க்கும்...
அனஸ்தீஷியா கொடுக்காமலேயே,
அறுவை சிகிச்சை செய்கிறhய்.

ஏன் என்னை இப்படி இம்சிக்கிறாய்

ஏதோ ஒன்று நம்மைவிட்டு பிரியப்போகிறது
என்ற ஒரு வலி
நம் மனதைப் பிசைந்தது.
ஓர் உணர்ச்சிப் பெருக்கு..
நான் உன் வீட்டை விட்டு
அகல்களையில் அழுதேவிட்டேன்.

இப்போதும் இறைவனைக் கேட்கின்றேன்.
ஏன் உன்னை இவ்வளவு நாள் என்னிடமிருந்து
மறைத்துவைத்தான் என்று.

முன்பே சொல்லக்கூடாதா..
நாம் பதிவுத்திருமணம் செய்யலாமென்று
நானும் அந்த நாளை
எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
பிரிவு இருந்தால்தான் உறவு பலப்படும் என்று
பலர் சொன்னாலும்..
நாம் சேர்ந்தே இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.

நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.
என்னை சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளேன்
ப்ளீஸ்...