ஞாயிறு, 26 ஜூன், 2011

இந்திய இறையாண்மை

அட்டூழியங்களை பகிரங்கமாக நடத்த இந்திய அரசு கையில் வைத்திருக்கும் லைசென்ஸ்.

ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கள்ள நோட்டு அடிபவர்களுக்கு தூக்கு தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

நம்மை துன்புருத்தும் பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கருப்புப் பணம் பதுக்குவோரின் கணக்குகளை முடக்க வேண்டும் - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

போதைப்பொருள் விற்போருக்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கொலைகுற்றத்திற்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

பாலியல் குற்றம் புரிவோருக்கு மிகக் கடுமையான தண்டனை, கசையடி - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கொள்ளை, திருட்டு குற்றத்திற்கு குறைந்தது 10 ஆண்டு சிறை தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

ராகிங் குற்றம் புரிவோருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

மனித நேயமே இல்லாமல் சித்திரவதி செய்து கொல்லும் அரக்கர்களை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும், தண்டனை வழங்க வேண்டும் - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

யாரேனும் ஊழலுக்கு எதிராக அமைதியாக உண்ணாவிரதம் இருந்தாலோ,
குரல் கொடுத்தாலோ தடியடி நடத்தி, விரட்டி அடித்து, மீண்டும் நடக்காமல் இருக்க பாடம் புகட்ட வேண்டும்.
இப்போது "இந்திய இறையாண்மை" பாதிக்கப்படாது.

யாரேனும் அவர்கள் வாழ்ந்த மண்ணிற்காக போராடினாலோ, ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தாலோ, துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு.
இப்போது "இந்திய இறையாண்மை" பாதிக்கப்படாது.

விஜயகாந்த் ஒரு வல்லரசு 'இந்தியா அல்ல'

(http://geethappriyan.blogspot.com ல் சேனல்4 தொடர்பான பதிவில் ஒரு அனானியின் கருத்துரை)

புதன், 22 ஜூன், 2011

இணையதள புரட்சி

கூகிள் மூலம் இனி நாம் இணையதளத்திலிருந்து ஆங்கிலம் தமிழ் நேரடியாக மொழிபெயர்க்க முடியும் என்பதை இன்று தெரிந்துகொண்டேன். போன வாரம் கூட இந்த வசதி இல்லாமல் போனது.

இனி விக்கியிலிருந்து பல தகவல்களை எளிதாக தமிழில் மொழி மாற்றம் செய்து படிக்கமுடியும் உதாரனத்திற்க்கு மருத்துவம் போன்ற சிக்கலான விஷயங்களை சாமானிய நபர் கூட தெரிந்து கொள்ள இயலும்.

ஆனால் பதிவர்களிடையே சோம்பேறித்தனத்தை உருவாக்கும் (திரைப்படங்களையோ இல்லை வேறேது சிந்தனைகளையோ அடுத்தவர் இடத்திலிருந்து copy செய்து வெளியிடுவார்கள்) சுய சிந்தனை இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எதாவது போட்டாகவேண்டும் என்று விகடனிலிருந்து copy paste செய்பவர்கள் இங்கே அதிகம்.

புதன், 1 ஜூன், 2011

இப்படியும் வாழ்த்துறாங்க

5 Short Lessons of Life

1. Once, all villagers decided to pray for rain, on the day of prayer all the People gathered but only one boy came with an umbrella…

THAT’S FAITH

2. When you throw a baby in the air, she laughs because she knows you will catch her…

THAT’S TRUST

3. Every night we go to bed, without any assurance of being alive the next Morning but still we set the alarms in our watch to wake up…

THAT’S HOPE

4. We plan big things for tomorrow in spite of zero knowledge of the future or having any certainty of uncertainties. ..

THAT’S CONFIDENCE

5. We see every one is suffering because of a certain creature. We know there is every possibility of same or similar things happening to us. But still we get married

THAT’S OVER CONFIDENCE!!

புதன், 9 மார்ச், 2011

காதல்

காதல்...!!
எத்தனைமுறை உச்சரித்தாலும்
இனிக்கும்...

இனிப்பு..
உணர்கிறேன் நாவில் அல்ல, மனதில்..
உன் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம்...!!

உச்சரித்தேன்,
நான் பிறக்கும்போது ‘அம்மா’ வென்று..
நீ என் பெயரை கூறுகையில் மறுபடியும் பிறக்கிறேன்.

பிறப்பு..
அடுத்த ஜென்மத்தில் நான் எங்ஙனம் பிறந்தாலும்
நீ மட்டும் நீயாகவே தோன்றவேண்டும்.

தோற்றம்..
எனக்கு உன்னைக் கண்டபின்பு - நீ விட்டு விலகியதில்
அனுதினம் சந்திக்கிறேன் மரணம்..!!

மரணம்..
நடந்தபின்பு என்ன நடக்கும் ?
அறிய எல்லோர்க்கும் உயிரோடிருக்கும்போதே ஆசை..!!

ஆசை..
பலப்பல.. ஆளுக்கொன்றாக.. அவற்றை அடையவே
வாழ்கின்றோம் வாழ்க்கை..!!

வாழ்க்கை..
இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது
எல்லோருடைய பலநாள் கனவு..!!

கனவு..
எனக்கு கோட்டையல்ல எப்போதுமே
அது மிகச்சிறிய அழகான குடிசை..

குடிசை..
எரிந்தது உன்னால், பிரச்சினையில்லை - இனி
அழகாய் தெரியும் நிலா..!!

நிலா..
உன்னைவிட அழகு
என்று அன்று நான் சொன்னது பொய்..

பொய்..
.............................
இதற்கு விளக்கம் தேவையில்லை

தேவையில்லை..
என்று நீ கூறிய ஓர் சொல் என்னுள்
ஏற்படுத்தியது ஆறாத காயம்..!!

காயம்..!!
இதற்க்கு சாதிக்கத் தெரிந்தது
ஒன்று மட்டுமே - அதன் பெயர் வலி..

வலி..
நபருக்கு வித்தியாசப்பட்டாலும்
ஆறாமல் விட்டுச்செல்லும் ரணம் என்கிற நினைவுகளை..!!

நினைவுகள் ..
மட்டுமே வாழ்கையை நடத்தினாலும்
சில சமயம் இல்லாமல் போவது நல்லது...!!

நல்லது..
இருவரும் பிரிவது.. !!
என்றதில் தடுமாறி நின்றது என் மனம்..!!

மனம்..
உன்னுடையதாக இருப்பின் - அதை என்னால் இப்பவும்
புரிந்துகொள்ள முடிவதில்லை..!!

இல்லை..
என ஆகிவிட்டது என் வாழ்க்கை
இனி அவரவர் கையில் முடிவு ..!!

முடிவு..
நன்றாகவே அமைந்தது உனக்கு
நானோ தேடிக்கொண்டிருக்கிறேன் என் காதலை..

காதல்...???

சனி, 26 பிப்ரவரி, 2011

வருத்தம்

வருந்தத் தக்க
காரியத்தை நீ செய்ததால்
வருத்தப்பட்டு நிற்பது நான்தான்.

பாதிக்கப்பட்டது நான்தான்
என்பதாலோ என்னவோ..
என்னால் வருந்தத்தக்கப்படும்
நபர் நீ தான் என்பதை நான் குறிப்பிடுவதும்
சற்றே வருத்தப்படவேண்டிய விஷயம் தான்.

உனக்கே - நீ என்னால் விரும்பப்படும் நபர் என்று
தெரிந்தும்கூட என்னை கவனியாமல் சென்றதில் கூட
எனக்கு சற்றே வருத்தம் தான்.

டிஸ்கி:
நான் என்ன சொல்றேன்னு எனக்கே புரியாமல் போவது கூட
எனக்கு வருத்தம் தான்.

முடிவு என்பது எப்பவும் இல்லை..!!!

நான் நடந்தவற்றை மறக்கவில்லை..
என் மனதின் தூண்டுதலில் நடந்தன என்பதை நான் மறுக்கவுமில்லை..

என் காதல் உன் மனதை கரைக்கவுமில்லை..
நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு உரைக்கவுமில்லை..

மூடி வைத்த காதல் நெஞ்சம் விட்டு இறக்கவில்லை..
முடிந்து போன காதல் கண்டு நான் இறக்கவுமில்லை..

நீ இல்லாத வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை..
மீண்டும் நீ வரக்கூடும் என்பதால் இதை முடிக்கவுமில்லை..