ஞாயிறு, 26 ஜூன், 2011

இந்திய இறையாண்மை

அட்டூழியங்களை பகிரங்கமாக நடத்த இந்திய அரசு கையில் வைத்திருக்கும் லைசென்ஸ்.

ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கள்ள நோட்டு அடிபவர்களுக்கு தூக்கு தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

நம்மை துன்புருத்தும் பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கருப்புப் பணம் பதுக்குவோரின் கணக்குகளை முடக்க வேண்டும் - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

போதைப்பொருள் விற்போருக்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கொலைகுற்றத்திற்கு மரண தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

பாலியல் குற்றம் புரிவோருக்கு மிகக் கடுமையான தண்டனை, கசையடி - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

கொள்ளை, திருட்டு குற்றத்திற்கு குறைந்தது 10 ஆண்டு சிறை தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

ராகிங் குற்றம் புரிவோருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

மனித நேயமே இல்லாமல் சித்திரவதி செய்து கொல்லும் அரக்கர்களை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும், தண்டனை வழங்க வேண்டும் - வேண்டாம்,
"இந்திய இறையாண்மை" பாதிக்கப்படும்.

யாரேனும் ஊழலுக்கு எதிராக அமைதியாக உண்ணாவிரதம் இருந்தாலோ,
குரல் கொடுத்தாலோ தடியடி நடத்தி, விரட்டி அடித்து, மீண்டும் நடக்காமல் இருக்க பாடம் புகட்ட வேண்டும்.
இப்போது "இந்திய இறையாண்மை" பாதிக்கப்படாது.

யாரேனும் அவர்கள் வாழ்ந்த மண்ணிற்காக போராடினாலோ, ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தாலோ, துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு.
இப்போது "இந்திய இறையாண்மை" பாதிக்கப்படாது.

விஜயகாந்த் ஒரு வல்லரசு 'இந்தியா அல்ல'

(http://geethappriyan.blogspot.com ல் சேனல்4 தொடர்பான பதிவில் ஒரு அனானியின் கருத்துரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக