திங்கள், 8 நவம்பர், 2010

பைத்தியக்காரர்கள் நாங்கள்


புத்திசாலிகள் நீங்கள்
-------------

குறைந்தன மின்னஞ்சல்கள்
குறைந்தன பேச்சு வார்த்தைகள்
குமுறுகின்றேன் நான் - நிம்மதியாக
குறட்டைவிடப்போகிறேன்
குட்பை என்கிறாய் நீ

இப்போதெல்லாம் என் காதுகளில்
தேன் வந்து பாய்வதில்லை - காரணம்
அழகிய தமிழில் ஐ லவ் யூ என்று நான் சொல்வது உன்
அறை எங்கும் ஒலித்து
அது எனக்கே திரும்பவும் கேட்கிறது.
பதிலுக்கு - நீ
ஆங்கிலத்தில் தேங்ஸ் என்கிறாய் !!!!

இப்போதெல்லாம் கன்னத்தில்
செல் பேசியை வைப்பதில்லை
காரணம் - நீ கொடுக்கும்
முத்தங்கள் குறைந்து விட்டன.

இவ்வளவு நாள் உன் அன்பான
வார்த்தைகளைக் கேட்டு
குளிர்ந்திருந்த செல்பேசி
இப்போது அவ்வாறின்றி சீக்கிரமே சூடாகி
என் அவமானத்தை
குத்திக்காட்டுகிறது

யார் யாரையோ காரணம் காட்டி, நம்மிடையே இருக்கும்
யதார்த்தமான காதலுக்கு தடை போடுகின்றாய்.
இத்தனை வருடங்களாக அடக்கிவைத்திருக்கும் கனவுகளை
நான் உன்னைத்தவிர யாரிடம் தான் சொல்வது.

திருமணத்திற்கு பின்பு பேசுவதற்கு ஒன்றுமே இல்லை
என்பதற்காக விருப்பங்களை அடக்கி வைக்க
திருமணம் ஒன்றும் அணைக்கட்டு இல்லை.
அங்ஙனம் கட்டுவதற்கு நாம் ஒன்றும்
கர்நாடகத்திலோ கேரளாவிலோ பிறக்கவில்லை.

எப்படியிருந்தாலும் சில சமயம் பேசியவற்றை திரும்பவும்
பேசுவது மிகவும் சுகம். அது நீயாக மட்டும் இருக்கும் பட்சத்தில்
யோவ்...!!! முதலாளி நான் உன்னைச் சொல்லவில்லை.

புவிஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தால் தான்
எந்த ஒரு உயிரினமும் வாழ முடியும்
அங்ஙனம் அன்பு எப்போதும் இருக்கும் பட்சத்தில் தான்
காதலும் வாழ்ந்து கொண்டிருக்கமுடியும்
அவ்வளவு ஏன்
பட்டம் உயரே பறக்க நூல்
விட்டுக்கொண்டுத்தான் இருக்கவேண்டும்.

என் புலம்பல்கள் கூட உனக்கு
வேடிக்கையாகவும்
ஏன் இந்த கவிதை (?) கூட
மொக்கையாகவும் தான் இருக்கும்.

எது எப்படி ஆயினும் நீ
அவ்வாறு கூறியது பிடிக்கவில்லை
என்னுள் சந்தேகச் சாத்தான் பிறந்து விட்டான்
நம்மிடையே காதல் இருக்கிறதா
இல்லை உனக்கேதும் தனிப்பட்ட விருப்பம்
இருக்குமோ என்று.. !!!

இப்போதுதான் புரிகிறது ஏதோ ஒரு
புண்ணியவான் சொன்னது..
ஆண்கள் படும் அவஸ்தைகள் எவற்றையும்
பெண்கள் மதிப்பதே இல்லை என்று.

ஹி ஹி ஹி - நீங்கள்
எங்களை
எப்படிக் கண்டித்தாலும்,
எங்ஙனம் ஏறி மிதித்தாலும்,
எச்சில் காறி உமிழ்ந்தாலும்
ஏளனம் செய்து சிரித்தாலும்

பொய்க்கோபம் கொண்டு
உங்களுடைய விருப்பங்களை மட்டும்
நாசூக்காக நிறைவேற்றிக்கொண்டாலும்

எதுவும் நடக்காதது மாதிரியே
அவ்வனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு
அடுத்தது என்ன செய்யலாம் ‘செல்லம்’ என்றுதான் கேட்கிறோம்.
யாரும் கற்றுக்கொடுக்கத்தேவையில்லை
எங்களுக்கு பழகிவிட்டது.

காரணம் ஒன்றுதான்...
இறைவன் பெண்களுக்குப் போட்டியாக
வேறு எதையும் படைக்கவில்லை..

நீங்கள் இறைவனின் படைப்பிலேயே
மிகச்சிறந்தவர்கள்- ஏன்
இவ்வுலகில் உள்ள அனைவரையும்
படைத்தவர்களும் நீங்கள் தான்

ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும்
நாங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
புத்திசாலிகள் நீங்கள்
பைத்தியக்காரர்கள் நாங்கள்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக