சனி, 26 பிப்ரவரி, 2011

வருத்தம்

வருந்தத் தக்க
காரியத்தை நீ செய்ததால்
வருத்தப்பட்டு நிற்பது நான்தான்.

பாதிக்கப்பட்டது நான்தான்
என்பதாலோ என்னவோ..
என்னால் வருந்தத்தக்கப்படும்
நபர் நீ தான் என்பதை நான் குறிப்பிடுவதும்
சற்றே வருத்தப்படவேண்டிய விஷயம் தான்.

உனக்கே - நீ என்னால் விரும்பப்படும் நபர் என்று
தெரிந்தும்கூட என்னை கவனியாமல் சென்றதில் கூட
எனக்கு சற்றே வருத்தம் தான்.

டிஸ்கி:
நான் என்ன சொல்றேன்னு எனக்கே புரியாமல் போவது கூட
எனக்கு வருத்தம் தான்.

2 கருத்துகள்:

  1. இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதல் முறையாக வருகிறேன். உங்கள் கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன. வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகை மற்றும் கருத்துரைகள் மூலம் என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு