சனி, 26 பிப்ரவரி, 2011

முடிவு என்பது எப்பவும் இல்லை..!!!

நான் நடந்தவற்றை மறக்கவில்லை..
என் மனதின் தூண்டுதலில் நடந்தன என்பதை நான் மறுக்கவுமில்லை..

என் காதல் உன் மனதை கரைக்கவுமில்லை..
நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு உரைக்கவுமில்லை..

மூடி வைத்த காதல் நெஞ்சம் விட்டு இறக்கவில்லை..
முடிந்து போன காதல் கண்டு நான் இறக்கவுமில்லை..

நீ இல்லாத வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை..
மீண்டும் நீ வரக்கூடும் என்பதால் இதை முடிக்கவுமில்லை..

1 கருத்து:

  1. வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
    நன்றி பகிர்வுக்கு.....

    பதிலளிநீக்கு